ஹழ்ரத் நாகூர் நாயகம் அவர்கள் முயீனுதீன் அவர்களுடன் ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்றுக் கொண்டிருந்தார்கள் . சிறிது நேரம் இளைப்பாறினார்கள் . அப்பொழுது அந்த காட்டில் வசிக்கும் புலிகள் ஆண்டவர் அவர்களிடம் வந்து , மண்டியிட்டு உட்கார்ந்து , " வலியுல்லாஹ்வே !! தாங்கள் எங்கள் முதுகில் ஏறிக்கொண்டு எங்கெங்கு போகவேண்டுமோ அங்கெல்லாம் போகலாம் . இதற்காக நாங்கள் அல்லாஹ்வினால் ஏவப்பட்டிருக்கோம் " என்று வாய்திறந்து பேசியது . இதற்கு ஆண்டவர் அவர்கள் " நான் உங்கள் முதுகில் ஏறிப்போக வரவில்லை . உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வே போதுமானவன் . நீங்கள் உங்கள் வழியில் போகலாம் " என்று சொல்லி அந்தப் புலிகளை அனுப்பிவிட்டார்கள்
ஆண்டவர் அவர்கள் ஆச்சர்யப்பட்டு நின்ற முயீனுதீனைப் பார்த்து , " நீங்கள் நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள் . ஒருவர் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நடந்தால் , அவருக்கு எல்லா படைப்புகளும் வழிப்படுகின்றன . அவர் அல்லாஹ்வைச் சந்தித்து விலாயதையும் பெற்று என்றைக்கும் சந்தோசமாய் இருப்பார் " என்று சொன்னார்கள் . பிறகு அந்த காட்டின் வழியே குவாலியர் நோக்கிச் சென்றார்கள் .
No comments:
Post a Comment