நானிலம் போற்றும் நாகூர்

வாருங்கள் நண்பர்களே ! உங்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன் .நாகூர் இன்றுவரை பலரின் பிரச்னைகளுக்கு தீர்வுத் தரக்கூடிய இடமாகவும் ,பலருடைய நோய்களுக்கு சுகம்தரக்கூடிய தாகவும் ,மனக்கஷ் டதிற்கு நிம்மதி தரக்கூடிய இடமாகவும் இருக்கிறது .இதற்கு காரணமாக விளங்கும் அனைவராலும் நாகூர் ஆண்டவர் என்று அன்போடு அழைக்கப்படும் மகான் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அடக்கமாகி இருக்கும் நாகூர் தர்காவும் ,ஐந்து மினாராக்களும் கம்பீரமாக நிற்கின்றன . நாகூர் தர்கா இல்லைஎன்றால் நாகூர் இல்லை என்பதை இங்கு வரும் பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் . ஆம் !அதுதான் உண்மை !!பிரியமானவர்களே ,நாகூர் பற்றியும் ,நாகூர் ஆண்டவர்களின் வரலாறு ,அற்ப்புதங்களையும் தங்களுக்கு என்னால் இயன்றவரை தர இருக்கிறேன் .தொடர்ந்து தளத்திற்கு வருகை தாருங்கள் .நன்றி !!!
No comments:
Post a Comment