பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
நாகூர் ஹழ்ரத் செய்யிது சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின்
461-வது ஆண்டு கந்தூரி ஜியாரத் அழைப்பு
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ....
தென்னிந்தியாவின் இணையில்லா ஞானப் பேரொளி , எங்கள் பாட்டனார் ஹழ்ரத் செய்யிதினா செய்யிது சாகுல் ஹமீது காதிர் வலி கன்ஜசவாய் கஞ்சபக்ஸ் பாதுஷா நாயகம் அவர்களின் ஏற்றமிகு கந்தூரி பெருவிழா ஹிஜ்ரி 1439 - ஆம் வருடம் ஜமாதுல் ஆஹிர் மாதம் பிறை 1 - ல் தொடங்கி பிறை 14 - ல் முடிவுபெற இருக்கிறது . 2018 - ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 17- ஆம் தேதி தொடங்கி மார்ச் 2 - ஆம் தேதியோடு முடிவுபெற இருக்கிறது . புனிதமிகு இவ்விழாவிற்கு தாங்கள் சுற்றம் சூழ வருகை தந்து ஈருலக வாழ்விற்கும் தேவையான எல்லாவித ரஹ்மத்துக்களையும் , அருளையும் பெற்றுச் செல்லும்படி அன்புடன் அழைக்கின்றேன் . பாதுஷா நாயகம் அவர்களின்
" நியாஜ் " என்னும் காணிக்கைகளை எனது முகவரிக்கு அனுப்பிவைத்து தங்களது நாட்டங்களையும் எண்ணங்களையும் வெற்றியாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் . ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் கந்தூரி மற்றும் மற்ற நாட்களில் அன்னதானம் கொடுக்க இருப்பதால் அன்னதானம் தர விரும்புபவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ . 100 வீதம் தாங்கள் விரும்பும் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகையினை கீழ்க்கண்ட முகவரி அல்லது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . காணிக்கை அனுப்பும் அனைவருக்கும் பாதுஷா நாயகம் அவர்களின்
பாத்திஹா தப்ரூக் அனுப்பி வைக்கப்படும் .
ஹாஜி . H . வாஞ்சூர் பக்கீர் சாஹிப் ( நாகூர் தர்கா பங்குதாரர் & முஜாவர் ) ,
14/44 , கால்மாட்டு தெரு ,
நாகூர் - 611 002 ,
நாகை மாவட்டம் ,
தமிழ்நாடு .
செல் நம்பர் : +91 98941 25478 email ; hvfsahib@gmail.com
BANK ACCOUNT DETAILS :
ICICI BANK S.B A/C NO : 609401500942 NAGAPPATTINAM BRANCH
INDIAN BANK S.B A/C NO : 516380134 NAGORE BRANCH
நாகூர் தர்கா கந்தூரியின் விசேஷ நாட்களாவன :
ஜமாதுல் அவ்வல் பிறை 26 (13-02-2018) செவ்வாய் காலை 5 : 30 மணிக்கு பாய்மரம் ( கொடிமரம் ) ஏற்றப்படும் .
ஜமாதுல் ஆஹிர் பிறை 1 17-02-2018 சனி இரவு 8 : 30 மணிக்கு கொடி ஏற்றுதல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 8 24-02-2018 சனி இரவு 8 : 30 மணிக்கு வாணவேடிக்கை
ஜமாதுல் ஆஹிர் பிறை 9 25-02- 2018 ஞாயிறு இரவு 10 : 00 மணிக்கு பீர் ஜமாவின் குரு சில்லா இருத்தல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 10 26-02-2018 திங்கள் இரவு 8 : 30 மணிக்கு தாபூத்து என்னும் சந்தனக்கூடு நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் நாகூர் வந்ததும் 27-02-2018 செவ்வாய் அதிகாலை 4 : 30 மணிக்கு ஹழ்ரத் ஆண்டவர் அவர்களின் ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசுதல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 12 28-02-2018 புதன் மாலை 5 : 30 மணிக்கு பீர் பாவா கடற்கரைக்கு செல்லுதல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 14 02-03-2018 வெள்ளி இரவு 8 : 30 மணிக்கு கொடி இறக்குதல்
அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.இன்ஷா அல்லாஹ் வரும் 17.02.2017 நாகூர் ஷாஹுல் ஹமீது காதிர் வலி பாதுஷா நாயகத்தின் கந்தூரி கொடியேற்றம். 27.02.2018 புதன் அதிகாலை எஜமான் ரவ்லா ஷரீஃபில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இன்ஷா அல்லாஹ் அன்று பகல் நாகூர் வரும் யாத்ரீகர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். தங்களால் முடிந்த அளவு பொருளுதவியை பணமாகவோ, அரிசி,மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் சந்தன உரூஸ் அன்று நாகூர் ஷரீஃபில் தங்களை சார்ந்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு தேவையான உணவை பதிவு செய்து கொள்ளவும். வல்ல அல்லாஹ் தங்களின் ஸதகாவை கபூல் செய்து நாகூர் நாயகத்தின் வஸீலாவைக் கொண்டு சகல பாக்கியங்களும் பெற்று தொழிலில் அபிவிருத்தி, நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், ஈகை குணம் கொண்ட நிம்மதியான வாழ்க்கை, ஈருலக வெற்றி பெற அருள் புரிவானாக ! ஆமீன்!! பொருளை அனுப்புபவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
ஹாஜி. H. V. பக்கீர் சாஹிப் .கால்மாட்டு வாசல், நாகூர் தர்கா. நாகூர் ஷரீஃப்- 611002. பணம் அனுப்புபவர்கள் VANJOOR FAKEER SAHIB. H
SB A/C NO:609401500942
ICICI BANK , NAGAPATTINAM Branch IFSC CODE: ICIC0006094. என்ற வங்கி கணக்கில் ஆன்லைன். செக் மற்றும் டிராப்ட் மூலமாக அனுப்பி வைக்கவும். தொடர்புக்கு +91 9894125478 +91 9092799669.உங்கள் அனைவரின் வாழ்க்கை நலமோடும் வளமோடும் இருக்கவும் , தங்கள் தொழில் அபிவிருத்தி பெறவும் , தங்கள் குடும்பத்தினர் சுகத்தோடும் மகிழ்வோடும் நிம்மதியோடும் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .
தங்கள் அன்புள்ள ,
ஹாஜி . H . வாஞ்சூர் பக்கீர் சாஹிப் ( நாகூர் தர்கா பங்குதாரர் & முஜாவர் )
No comments:
Post a Comment