alangaara vaasal

Thursday, December 20, 2018

நாகூர் ஹழ்ரத் செய்யிது ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் 462-வது ஆண்டு கந்தூரி ஜியாரத் அழைப்பு


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் 

நாகூர் ஹழ்ரத் செய்யிது ஷாஹுல்  ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் 
462-வது ஆண்டு கந்தூரி ஜியாரத் அழைப்பு 

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....



தென்னிந்தியாவின் இணையில்லா ஞானப் பேரொளி, எங்கள் பாட்டனார் ஹழ்ரத் செய்யிதினா செய்யிது ஷாஹூல் ஹமீது காதிர் வலி கன்ஜஸவாய் கஞ்சபக்ஷ் பாதுஷா நாயகம் அவர்களின் ஏற்றமிகு கந்தூரி பெருவிழா ஹிஜ்ரி 1440-ஆம் வருடம் ஜமாதுல் ஆஹிர் மாதம் பிறை 1-ல் தொடங்கி பிறை 14-ல்  முடிவுபெற இருக்கிறது. 2019-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதியோடு முடிவுபெற இருக்கிறது. புனிதமிகு இவ்விழாவிற்கு தாங்கள் சுற்றம் சூழ வருகை தந்து ஈருலக வாழ்விற்கும் தேவையான எல்லாவித ரஹ்மத்துக்களையும் அருளையும் பெற்றுச் செல்லும்படி அன்புடன் அழைக்கின்றேன். பாதுஷா நாயகம் அவர்களின் " நியாஜ் " என்னும் காணிக்கைகளை எனது முகவரிக்கு அனுப்பிவைத்து தங்களது நாட்டங்களையும் எண்ணங்களையும் வெற்றியாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் கந்தூரி மற்றும் மற்ற நாட்களில் அன்னதானம் கொடுக்க இருப்பதால் அன்னதானம் தர விரும்புபவர்கள்  தாங்கள் விரும்பும் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகையினை கீழ்க்கண்ட முகவரி அல்லது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காணிக்கை அனுப்பும் அனைவருக்கும் பாதுஷா நாயகம் அவர்களின் பாத்திஹா தப்ரூக் அனுப்பி வைக்கப்படும். 

    நாகூர் தர்கா கந்தூரியின் விசேஷ நாட்களாவன :

    ஜமாதுல் ஆஹிர் பிறை 1   06.02.2019 புதன் இரவு 8:30 மணிக்கு கொடி ஏற்றுதல் 

    ஜமாதுல் ஆஹிர் பிறை 8   13.02.2019 புதன் இரவு 8:30 மணிக்கு வாணவேடிக்கை 

    ஜமாதுல் ஆஹிர் பிறை 9   14.02.2019 வியாழன் இரவு 10:00 மணிக்கு பீர் ஜமாவின் குரு சில்லா இருத்தல் 

    ஜமாதுல் ஆஹிர் பிறை 10   15.02.2019 வெள்ளி இரவு 7:00 மணிக்கு தாபூத்து என்னும் சந்தனக்கூடு நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் நாகூர் வந்ததும் 16.02.2019 சனி அதிகாலை 5:00 மணிக்கு ஹழ்ரத் நாகூர் ஆண்டவர் அவர்களின் ரவ்லா ஷரீஃபுக்கு சந்தனம் பூசுதல் 

    ஜமாதுல் ஆஹிர் பிறை 12   17.02.2019 ஞாயிறு மாலை 5:00 மணிக்கு பீர் பாவா கடற்கரைக்கு செல்லுதல் 

    ஜமாதுல் ஆஹிர் பிறை 14   19.02.2019 செவ்வாய் இரவு 8:30 மணிக்கு கொடி இறக்குதல் 

    நாகூர் தர்கா ஷரீஃப் நிகழ்ச்சிகளாவன :

    ரபீயுல் ஆஹிர் பிறை 17  27.12.2018 வியாழன் மாலை 5:00 மணிக்கு சாந்து முகூர்த்தம் 

    ஜமாஅத்துல் அவ்வல் பிறை 27  02.02.2019 சனி அதிகாலை 5:00 மணிக்கு கொடிமரம் (பாய்மரம்) ஏற்றுதல் 

    ஜமாஅத்துல் ஆஹிர் பிறை 1  06.02.2019 புதன் காலை 6:00 மணிக்கு போர்வை (பர்தா) மாற்றுதல் 

    ஜமாஅத்துல் ஆஹிர் பிறை 3  08.02.2019 வெள்ளி காலை 10:00 மணிக்கு சந்தனக்கட்டை அரைத்தல் தொடக்கம் 

    ஜமாஅத்துல் ஆஹிர் பிறை 10  15.02.2019 வெள்ளி காலை 10:00 மணிக்கு சந்தனம் பிழிதல்

    ஜமாஅத்துல் ஆஹிர் பிறை 10  15.02.2019 வெள்ளி இரவு 8:30 மணிக்கு தங்கப் போர்வை போர்த்துதல் 
    
    ஜமாஅத்துல் ஆஹிர் பிறை 11  16.02.2019 சனி அதிகாலை 1:00 மணிக்கு புனித ரவ்லா ஷரீஃப் சுத்தம் செய்தல் 


  • நாகூர் ஷாஹுல் ஹமீது காதிர் வலி பாதுஷா நாயகம் (ரலி) அவர்கள் ஜீவித காலத்தில் உபயோகப்படுத்திய  பரக்கத்தான தொப்பி, தஸ்பீஹ், கிஸ்தி, கைத்தடி போன்ற பொருட்களை காணலாம்.
  • தங்களின் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான ஸதகா (தானம்) உணவு, பொருட்கள், பணம் தருவதற்கு பொறுப்பேற்று செய்து தருகிறேன்.
  • நம்மை விட்டு மறைந்த தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக ஹத்தமுல் குர்ஆன் (குர்ஆன் முழுமையாக ஓதி) அவர்களுக்காக தமாம் செய்து ஈஸால் ஸவாப் செய்வதற்கும் என்னை அணுகலாம்.
  • மனநிம்மதி, நோயற்ற வாழ்வு, தொழில் அபிவிருத்தி, காரியத்தில் வெற்றி, வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள், தடைகள் ஒழிய தாங்கள் விரும்பும் வகையில் 
          1. குர்ஆன் ஓதுதல்
          2. ராத்திப் (திக்ர்) மஜ்லிஸ் வைத்தல்
          3. சங்கை மிக்க ஸலவாத்துன் நாரிய்யா மஜ்லிஸ் (4444 முறை ஸலவாத் ஓதி துஆ மஜ்லிஸ்)  ஏற்பாடு செய்வதற்கும் என்னை அணுகலாம்.
  • மனநாட்டங்களுக்கும் தேட்டங்களுக்கும் மனநிம்மதி வேண்டியும் 

  1. புனிதமிக்க புர்தா ஷரீஃப் 
  2. சுப்ஹான மவ்லிது மஜ்லிஸ் 
  3. முஹ்யித்தீன் மவ்லிது மஜ்லிஸ் 
  4. மீரான் சாஹிப் மவ்லிது மஜ்லிஸ் வைத்து துஆ கேட்கவும் 
          காரியங்கள், நாட்டங்கள், தேட்டங்கள் நிறைவேறி நோய்களிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டதற்கு முராதுகள் ஹாஸில் ஆனதற்கு வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக நம்மால் முடிந்த எண்ணிக்கையில் அன்னதானம் செய்யவும் என்னை அணுகலாம்.
  • தர்கா ஷரீஃபில் தினசரி பணிகளான ரவ்லா ஷரீஃபுக்கு தேவையான சாம்பிராணி, விளக்கு பிரகாசிக்க தேங்காய் எண்ணெய், பன்னீர் பாட்டில்கள் எனக்கு அனுப்பி வைக்கவும்.
  • ரவ்லா போர்வைகள், கொடிகள், பிரார்த்தனை வெள்ளி சாமான்கள், குத்துவிளக்குகள், கொம்புத்தேங்காய் தேவைக்கும் என்னைத் தொடர்பு கொள்ளவும்.


           உங்கள் அனைவரின் வாழ்க்கை நலமோடும் வளமோடும் இருக்கவும் தங்கள் தொழில் அபிவிருத்தி பெறவும் தங்கள் குடும்பத்தினர் சுகத்தோடும் மகிழ்வோடும் நிம்மதியோடும் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். 



தங்கள் அன்புள்ள, 
ஹாஜி . H . வாஞ்சூர் பக்கீர் சாஹிப் (நாகூர் தர்கா பங்குதாரர் & முஜாவர்),
14/44, கால்மாட்டுத் தெரு,
நாகூர் - 611 002,
நாகை மாவட்டம்,
தமிழ்நாடு.

செல் நம்பர்: +91 98941 25478    இ-மெயில்:  hvfsahib@gmail.com

BANK ACCOUNT DETAILS:

SB A/C NO.: 609401500942 ICICI BANK NAGAPATTINAM BRANCH IFSC CODE:  ICIC0006094
 SB A/C NO.: 516380134 INDIAN BANK NAGORE BRANCH IFSC CODE: IDIB000N077

No comments:

Post a Comment